லண்டன்: கொரோனா வைரஸ் அச்சத்தால், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வின்ட்சர் கேஸில் அரண்மனைக்கு இடம்பெயர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ், ஏதோ ஒரு உலகப்போர் நடக்கிறதா? என்று நினைக்கும் வகையில் உலக நடவடிக்கைகளை முடக்கி, மக்களை மட்டுமல்ல, தலைவர்களையும் பீதிக்குள்ளாக்கி வருகிறது.

பிரிட்டனில் அந்த வைரஸ் தொற்று அதிகளவில் இருப்பதால், 93 வயதுடைய ராணி மற்றும் 98 வயதுடைய அவரின் கணவர் பிலிப் ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வின்ட்ஸர் கேஸில் அரண்மனைக்கு இடம்பெயர்கின்றனர்.

“ராணி முழு உடல் நலத்துடன் உள்ளார். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துழைத்து, அவர் இடமாறுகிறார்” என்று அரண்மனை அதிகாரிகள் கூறினர்.