பொதுமக்களே… தினமும் கிருமி நாசினியைக் கொண்டு வீடுகளை சுத்தப்படுத்துங்கள்……

 

சென்னை:

பொதுமக்கள் வீடுகளில் தினமும் கிருமி நாசினி தெளிவித்து, வீடுகளை சுத்தமாக வைத்திருங்கள் என்று சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தடுப்பு நடவடிக்கையை தமிழகஅரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நோய் தொற்று பரவுவதை தடுக்க பொதுமக்கள் வீடுகளை கிருமிநாசினி தெளித்து  சுத்தமாக வைத்திருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.பிரகாஷ்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸ்  பரவுவதைக் கட்டுப்படுத்த, நகரத்தில் வசிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் வீடுகளை கிருமி நீக்கம் செய்யுங்கள்.. இது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்.

சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள், அலுவர்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

அனைத்து பகுதிகளிலம்  கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் தனிமைப் படுத்தப்பட்ட நடவடிக்கைகள், மற்றும் பொதுமக்களிடம் காய்ச்சல் போன்றவை பரவுவதை தடுக்கும் வகையில், வீடுகள் தோறும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் கிருமி நீக்கம் செய்வதற்கு, வெளியிடடங்களில் நாங்கள் பல இயந்திரங்களை பயன்படுத்தியிருந்தாலும், அனைத்து குடிமக்களுக்கும் எங்கள் வேண்டுகோள் என்னவென்றால், அவர்களின் வீடுகளின் உட்புறங்களை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

ஒரு சில லிட்டர் தண்ணீரில் சிறிது அளவு டெல்டாலை ஊற்றி, அதைக்கொண்டு, கதவு கைப்பிடிகள், கைப்பிடிகள், வெளிப்புற வாயில்கள், டிவி ரிமோட்டுகள், மொபைல் போன்கள், கம்ப்யூட்டர் விசைப்பலகைகள், இரு சக்கர வாகனங்கள் (குறிப்பாக கைப்பிடிகள்), கார் ஸ்டீயரிங் போன்றவற்றை அவ்வப்போது துடைத்து சுத்தப்படுத்துங்கள்.

“தயவுசெய்து தினமும் இதைச் செய்து,  இதுகுறித்து, உங்கள் அருகிலுள்ள அனைவருக்கும் அன்பானவர்களுக்குத் தெரிவிக்கவும்.

இது ஒரு வேண்டுகோள், அனைவரிடமிருந்தும் முழு மனதுடன் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

முதலில் இந்த பணியை உங்கள் வீடுகளிலிருந்தும் அலுவலகங்களிலிருந்தும் நீங்கள் தொடங்கலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.