கொரோனா தடுப்பு: சென்னை மாநகராட்சி, உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு!

சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு ரூ 4 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக  தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் உள்ளாட்சிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 15 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிக்சை பெற்று வருகின்றனர்.  வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளதாக அறிவித்து உள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகராட்சிக்க ரூ 4 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மேலும் நகராட்சி நிர்வாகத்திற்கு 6 கோடி, பேரூராட்சிக்கு 2 கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், களப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு 17,140 சுய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது..