சென்னை:

மிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதற்கான அரசாணையை  தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில்,  ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 கண்காணிப்புக் குழுக்களுடன் ஏற்கனவே அமைக்கப்பட்டன. அந்த குழுவினருடன்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமைச் செயலகத்தல்  கடந்த 9ந்தேதி ஆலோசனை  நடத்தினார்.

தமிழகத்தில், கொரொனாவால் இதுவரை  859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,.இதில், 44 பேர் குணமடைந்துள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று பிரதமர் மோடியுடன் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து,  தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, , ஊரடங்கு மற்றும் சட்டம்- ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க 12 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை நியமித்து அரசானை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை காவல்துறை ஆணையர், ஏடிஜிபிக்கள் பங்கேற்றுள்ளனர்.