பெண்களிடையே வரவேற்பு…. டிரெண்டிங்காகும் ‘கொரோனா’ சேலைகள்…

புதியப்படங்கள் வெளியாகும் போதும், புதுமுக நடிகைகள் திரையுலகுக்குள் வரும்போதும் அவர்களின் பெயர்களில் புதிய ரக சேலைகள் வெளிவருவது வழக்கம். இதில் சில ரகங்கள்  பெண்களிடையே அமோக வரவேற்பை பெற்று  வியாபாரத்தில் சக்கைப்போடு போடும்….

ஆனால், தற்போது உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் ‘கொரோனா’ வைரஸ் போன்ற படம் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள சேலைகள் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது… ஜவுளி உலகில் கொரோனா சாரி(சேலைகள்) டிரெண்டிங்காகி வருகிறது…

பொதுவாக விசேஷ தினங்களின்போது, புதியரக சேலைகளை கடைகளின் ஷோகேசிலும், வாசல்களிலும் தொங்கவிட்டு, பொதுமக்களை கவர்ந்திழுப்பது வியாபாரிகளின் வாடிக்கை…

தற்போது, கொரோனா வைரஸ் பீதி மக்களிடையே பரவி, அசைவ உணவுகளை தவிர்த்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் படம் பிரின்ட் போட்ட சேலைகளை வியாபாரிகள், பெண்களை கவரும் வகையில் விளம்பரப்படுத்தி வருகின்றனர்…

சேலை ரகங்கள் அதிகமிருந்த கடைகளில் கொரோனா ரக சேலைகள்  அதிக அளவில் விற்பனையாகி வருகிறது..  இந்த புதிய வகையான பிரின்டட் சேலைகள் பெண்களியே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், டிரெண்டிங்காகி வருவதாகவும் கூறப்படுகிறது…

கார்ட்டூன் கேலரி