‘கரோனா பியார் ஹை’ டைட்டில் இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அமைப்பில் பதிவு….!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக அளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காணப்படுகிறது. இதனால் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்களும், தங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கரோனா வைரஸை மையமாக வைத்து திரைப்படம் இயக்கும் வேலைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. க்ருஷ்ணிகா லுல்லா என்ற இயக்குநர், ‘கரோனா பியார் ஹை’ என்ற தலைப்பை இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அமைப்பில் சமீபத்தில் பதிவு செய்துள்ளார்.