கொரோனா : சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் அரசின் தனிமை விடுதி 

ராய்ப்பூர்

கொரோனா பாதிப்பு அடைந்தோரைத் தனிமையில் தங்க வைக்கக் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவையும் பற்றி உள்ளது.   இதையொட்டி மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனா நோய் தொற்றியவர்களை இரு வாரங்கள் தனிமையில் வைப்பதன் மூலம் இந்த நோய் பரவுவதைத் தடுக்க முடியும் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.   அதன்படி கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகள் மற்றும் விடுதிகளில் தனிமையில்  தங்க வைக்கப் படுகின்றனர்.

இவர்கள் தங்க காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு சிறப்பு விடுதியை அம்மாநில அரசு அமைத்துள்ளது.   இந்த தகவலைப் புகைப்படங்களுடன் அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ளார்.

 

சத்தீஸ்கர் முதல்வர் டி எஸ் சிங் டியோ தனது டிவிட்டரில், “நமது புதிய தனிமைப்படுத்தும் விடுதி ராய்ப்பூரில் தயாராகி உள்ளது. மக்களாகிய நாம் அனைவரும்  இணைந்து கோவிட் 19 கொடுமையை முறியடிப்போம்” எனப் பதிந்துள்ளார்.