கொரோனாவில் இருந்து மீண்ட சூரத் தொழிலதிபர் அமைத்த ஏழைகள் மருத்துவமனை

சூரத்

கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ள காதர்ஷேக் என்னும் சூரத் தொழிலதிபர்  தனது அலுவலகத்தை ஏழைகளுக்கான கொரோனா மருத்துவமனையாக மாற்றி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவுதல் அதிக அளவில் உள்ளது.  இங்கு 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 2256 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதில் வர்த்தக நகரமான சூரத் நகரில்  சுமார் 11000 பாதிக்கப்படு 323 பேர் உயிர் இழந்துள்ளனர்.  குஜராத் மாநில அளவில் சூரத் நகரம் இரண்டாம் இடத்தில் உள்ளது   இவர்களில் 7326 பேர் குணம் அடைந்து தற்போது 3139 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சூரத் நகரில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களில் ஒருவரான காதர் ஷேக் என்னும் 63 வயது முதியவர் கடந்த ஒரு மாதம் முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.  இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து குணம் அடைந்தார்.  அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்படும் ஏழை மக்களால் இவ்வளவு செலவு செய்ய முடியாது என்பதை உணர்ந்து ஒரு முடிவுக்கு வந்தர்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் காதர் ஷேக் ஸ்ரேயம் வளாகத்தில் உள்ள 30000 சதுர அடி அலுவலகத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்தார்.  அதன்படி 85 படுக்கைகள்  மற்றும் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட ஒரு கொரொனா மருத்துவமனையை உருவாக்கி அதை ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க நன்கொடையாக அளித்துள்ளார்.

இது குறித்து சூரத் மாநகராட்சியுடன் காதர் ஷேக் ஒரு ஒப்பந்தம் இட்டுள்ளார்.   அதன்படி மாநகராட்சி 15 ஐசியு படுக்கைகளையும் மருத்துவ நிபுணர்களையும் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.    கடந்த செவ்வாய் அன்று மருத்துவமனை தயாரானதல்சூரத் மாநகராட்சி அதிகாரிகள் இந்த மருத்துவமனையைப் பார்வை இட்டன்ர்.

காதர்ஷேக் தனது பேத்தியின் பெயரில் அமைத்துள்ள இந்த மருத்துவமனை சரியான வசதிகளுடன் உள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள் வெகு விரையில் இந்த மருத்துவமனை இயங்கத் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளனர்.