சென்னை:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில்,  1000 ரூபாய் நிவாரணம் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி இன்று  தொடங்கியது.

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரேனா பரவல் தீவிரம் காரணமாக முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இதையொட்டி,  அந்த 4 மாவட்டங்களில்  வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (22ந்தேதி) முதல் 1000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை நிவாரண உதவி வழங்கும் பணி தொடங்கியது. மக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை பணியாளர்கள், இந்த உதவித்தொகையை வழங்கி வருகிறார்கள்.

பொதுமக்கள் தங்களுக்கான ரேசன் ஸ்மார்ட் அட்டை காண்பித்து, அதை பதிவு செய்து,  ரூ.1000 (500 ரூபாய் நோட்டு –2) வழங்கப்பட்டது. அவர்கள் பதிவுசெய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு ரூ.1000 நிவாரண தொகை பெற்றுக்கொண்டதாக தகவல் வந்தது.