கொரோனா : சுகாதார சேவையில் இணைந்துள்ள ஓய்வு பெற்ற லண்டன் மருத்துவர்கள்

ண்டன்

கொரோனா தடுப்பு முயற்சிக்கு உதவ பிரிட்டன் நாட்டில் உள்ள ஓய்வு பெற்ற மருத்துவர்களும் செவிலியர்களும் முன் வந்துள்ளனர்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்புக்காக அனைத்து நாடுகளின் மருத்துவர்களும் சேவை செய்து வருகின்றனர்.

பிரிட்டனில் தேசிய சுகாதார சேவை மையம் இந்த தொண்டினை செய்து வருகிறது.

கொரோனா பாதிப்புக்குள்ளானோருக்கு சிகிச்சை அளிக்கவும் மேற்கொண்டு பரவாமல் தடுக்கவும் இந்த அமைப்பு தொண்டாற்றி வருகிறது.

பிரிட்டன் அரசு இந்த அமைப்புக்கு ஓய்வு பெற்ற சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களை உதவிக்கு வருமாறு அழைத்தது.

அந்த அழைப்பில் “தற்போது நாட்டு மக்களுக்குத் தேசிய சுகாதார சேவை மையம் தேவையாக உள்ளது, அந்த மையத்துக்கு ஓய்வு பெற்ற மருத்துவர்களும் செவிலியர்களும் தேவையாக உள்ளது.” எனத் தெரிவித்து இருந்தது.

அதை ஏற்று இந்த அமைப்பில் 4000 ஓய்வு பெற்ற செவிலியர்களும் 500 ஓய்வு  பெற்ற மருத்துவர்களும் இணைந்துள்ளனர்.