நியூயார்க்: கோவிட் -19 நோயாளிகளின் மரபணுவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இரத்தத்தின் வகையைப் பொறுத்து கடுமையான தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மாறுபடலாம் என பரிந்துரைப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் மரபணுக்களை ஒப்பிட்டுப் பார்த்த விஞ்ஞானிகள், “A” – வகை இரத்தம் உள்ளவர்களுக்கு கடுமையான தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், “O”-வகை இரத்தம் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர். நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் புதன்கிழமை அறிக்கை இரத்த வகையுடனான தொடர்பை விளக்கவில்லை என்றாலும், சீனாவின் முந்தைய அறிக்கையை உறுதிப்படுத்துகிறது.

“இது மிகவும் மேலோட்டமான, சிக்கலான ஆய்வு என்பதால், விஞ்ஞானிகளில் பெரும்பாலானோர் அதை பொருட்படுத்தவில்லை,” என்று விஸ்கான்சின் மருத்துவக் கல்லூரியின் இரத்த மண்டல நிபுணர் டாக்டர் பரமேஸ்வரன் ஹரி, சீனாவிலிருந்து வெளியிடப்பட்ட அந்த அறிக்கை குறித்து கூறினார். ஆனால், புதிய ஆய்வு முடிவுகளைக் கண்டதும் அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார். மேலும், “இது மிகவும் முக்கியமான ஒரு ஆய்வாகவும்  இருக்கலாம்.” மற்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கையுடன் வலியுறுத்தினர். மற்ற விஞ்ஞானிகள் கூறும்போது, “இரத்த வகையின் பங்கு என்பது தற்காலிகமானது… இந்த சான்றுகள் உறுதிப்படுத்தும் அளவுக்கு போதுமானதாக இல்லை” என்று சான் டியாகோவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி மொழிபெயர்ப்பு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எரிக் டோபோல் கூறினார்.

இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பங்கு கொண்டுள்ள இந்த ஆய்வு, கடுமையான கோவிட் -19 பாதிப்பைக் கொண்டுள்ள சுமார் 2,000 நோயாளிகளை, ஆரோக்கியமாக அல்லது லேசான அல்லது அறிகுறிகள் இல்லாத பல ஆயிரம் மக்களுடன் ஒப்பிடுகிறது. இந்த ஆய்வில் ஆறு ஜீன்களில் உள்ள மாறுபாடுகளை ஆராய்ச்சியாளர்கள் கடுமையான நோய்க்கான சாத்தியக்கூறுகளுடன், சில வைரஸால் பாதிக்கப்படக்கூடிய அபாயத்திற்கான சாத்தியமுள்ள மக்கள் மற்றும் அவர்களின் இரத்த வகையுடன் இணைத்துள்ளனர்.

இது போன்ற பெரும்பாலான மரபணு ஆய்வுகள் மிகப் பெரியவை. உலகின், மற்ற விஞ்ஞானிகள் மற்றொரு நோயாளிகளின் குழுக்களிலும், இதேபோன்றதொரு போக்கை காண்கிறார்களா என காண்பது மிகவும் முக்கியமானது,” என்று டோபோல் கூறினார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் நோயின் கடுமை ஒரே மாதிரி இல்லை என்பதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றனர். வயது, பாலினம் போன்ற பல காரணிகளையும் ஒப்பிட்டு ஏற்கனவே ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இரத்தத்தில், A, B, AB மற்றும்  O – ஆகிய நான்கு முக்கிய வகைபாடுகள் உள்ளன. இந்த வகைபாடுகளை, இரத்த சிவப்பு செல்களின் மேற்பரப்பில் உள்ள புரதங்களே தீர்மானிக்கின்றன,” என்று சர்வதேச இரத்த மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் மேரி ஹோரோவிட்ஸ் கூறினார். “O” வகை இரத்தம் உடையவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம், நமது உடலுக்கு தொடர்பில்லாத, வெளியில் இருந்து வரும் புரதங்கள் அல்லது அது போன்ற கரிம சேர்மங்களை எளிதில் அடையாளம் கண்டு நோயெதிர்ப்பு செயல்பாடுகளைத் தூண்டுகிறது என்று கூறப்படுகிறது. இந்த சிறப்பு அம்சம், கொரோனா நோய் தொற்று ஏற்படும்போதும் சிறப்பாக செயபடலாம் என்பதால் இவ்வகை இரத்தம் கொனடவர்களுக்கு கொரோனா தொடரின் அபாயம் குறைவு என இந்த ஆய்வில் விளக்கப்படுகிறது.

தற்போதைய தொற்றுநோயை ஏற்படுத்தும் கொரோனா குடும்பத்தை சேர்ந்த SARS – தொற்று ஏற்பட்டபோதும்,  “O” வகை இரத்தக் கொண்டவர்களுக்கு கடுமையான நோய் ஏற்பட்டது குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது” என்று அவர் கூறினார். காலரா, ஈ.கோலை பேக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்று, வயிற்றில் புண்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எச். பைலோரி போன்ற சில தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறு, இரத்த வகைகளுடன்தொடர்புடையது  என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மரபணு மருத்துவ நிறுவனத்தின், இயக்குனர் டாக்டர் டேவிட் வால்லே தெரிவித்தார்.

இறுதியாக கூறுவதானால், இது ஒரு ஆரம்பகட்ட ஆனால், முக்கியமான ஆய்வு. இது மிகவும் மதிப்புமிக்கது என்றாலும், இதை முழுமையாக சரிபார்க்க, இன்னும் அதிகமான நோயாளிகளுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று வாலே கூறினார்.

தமிழில்: லயா