சென்னை: கோழி இறைச்சி வழியாக கொரோனா பரவுகிறது என்ற வதந்தியால், சென்னையில் மீன் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது.

தமிழத்தில் கொரோனாவின் தாக்கம் இன்னும் வீரியமாகவில்லை என்றாலும், அதுதொடர்பான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டே வருகின்றன.

அதேசமயம், அதுதொடர்பான வதந்திகளுக்கும் குறைச்சலில்லை.
கோழி இறைச்சியால் கொரோனா பரவுகிறது என்பது அந்த வதந்திகளில் ஒன்று. இதனால், சிக்கன் பிரியர்கள் அனவைரும் திடீரென மீன்களின் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால், சிக்கன் விலை சரிந்து மீன் விலை எகிறியுள்ளது.

இதனால் கிலோ ரூ.200க்கு விற்ற கறிக்கோழி தற்போது ரூ.120 என்பதாக சரிந்துள்ளது. ஆனால், மீன்களின் விலை ரகத்திற்கு ஏற்ப 20% முதல் 50% வரை சரிந்துள்ளது.

மீன் சந்தைகளில் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அலைமோதுகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் சென்னை காசிமேடு மீன் சந்தையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்கள் வாங்கிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.