திருப்பூர்:

மூக வலைதளமான வாட்ஸ்அப்பில் கொரோனா  தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேர் ஈரோட்டில்  கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் நோய் குறித்து பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் சிலரால் பரப்பப்பட்டு,  மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன. இதுபோன்ற வதந்திகளை கட்டுப்படுத்தும் வகையில், காவல்துறையினரின் சைபர் கிரைம் தீவிரமாக  பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில்,   ஈரோடு மாவட்டம் சித்தோடு சுற்றுவட்டாரங்களில், கொரோனா தொற்று குறித்து, வாட்ஸ்அப்பில் வதந்திகள் உலா வருவதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இந்த வதந்திகளை தருமபுரியை சேர்ந்த வாசுதேவன் மற்றும் சித்தோட்டை சேர்ந்த கமலேஷ், வரதராஜ் ஆகியோர் பரபப்பியது தெரிய வந்தது.

அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில்அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.