மதுரை:

துரையிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளளது- கடந்த 16 மணி நேரத்தில் 10 பேர் பலியான நிலையில், மேலும்  25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கும் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை (24ந்தேதி  மாலை நிலவரம்)-1073 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 641 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும்,  423 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும்,9 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை (25ந்தேதி)  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் மதுரை பரவை மார்க்கெட்டில் பரிசோதனை நடத்தியதில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, மார்க்கெட்டில் கடை வைத்திருந்த வர்கள், அங்கு பொருட்கள் வாங்கியவர்களை கண்காணிக்கும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.