தமிழகத்தில் துள்ளாட்டம் போடும் கொரோனா… ஒரேநாளில் 798 பேர் பாதிப்பு…

சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக இன்று (11/5/2020) ஒரே நாளில் புதிதாக   798 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 798 பேரில், 538 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.  இன்று கொரேனாவால் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

இன்று பாதிப்புக்குள்ளானவர்களில் ஆண்கள் 514, பெண்கள் 284பேர்.

இன்று மட்டும் 92 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,051 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் மொத்தம் 11,584 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2,43,952 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் தமிழகத்தில் 5,895 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4371 ஆக உயர்ந்துள்ளது.