இந்தியாவில் கொரோனா உச்சம்… ஒரே நாளில் 32695 பேர் பாதிப்பு…

--

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 6,12,815 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடையும் விகிதம் 63.3 சதவீதமாக உள்ளது.
தற்போதைய நிலையில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,31,146 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 275640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 152613 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 10928 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 151820 பேருக்கும், டெல்லியில் 116993 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.