கொரோனா நிலவரம்: இன்று 3வது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று பரவல்  நிலவரம் தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலாலை,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3வது முறையாக இன்று சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தீவிரமடைந்து வருகிறது.  இதனால் சென்னை உள்பட 4 மாவட்டங்களைத் தவிர்த்து பல மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுஉள்ளன.

இந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கம் அளிக்க உள்ளார்.

கடந்த 2 மாதங்களில் முதல்வர் எடப்பாடி ஆளுநரை  சந்திப்பது இது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி