டெல்லி:

மிழகம் உள்பட 19 மாநிலங்களில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகவர்வால் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கடந்த வாரம் கொரோனாவின் தாக்கம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, ஊரங்கின் காலம் மே மாதம் 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை இணைச் செயலாளர் அகர்வால், தற்போதைய நிலவரப்படி,  19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில்  கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறி உள்ளார்.

கேரளா, உத்தரகாண்ட், ஹரியாணா, லடாக், இமாச்சலப் பிரதேசம், சண்டீகர், புதுவை, பிகார், ஒடிசா, தெலங்கானா, தமிழகம், ஆந்திரப்பிரதேசம், டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அசாம், திரிபுரா  ஆகிய மாநிலங்களில், நோய் பாதிப்பு எண்ணிக்கை  ஓரளவுக்கு குறைந்துள்ளது.

நோய் பாதிப்பு விகிதாச்சாரம் 2020 ஏப்ரல் 1 தேதியின்படி 1.2 என்ற அளவில் இருந்தது. அதற்கு முந்தைய காலத்தில் (மார்ச் 15 முதல் மார்ச் 31 வரையில்) அது 2.1 ஆக இருந்தது.

அதாவது நோய் பரவும் விகித வளர்ச்சியில் 40 சதவீதம் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்