சென்னை: மாநில தலைநகர் சென்னை புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,  சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் இணைந்து திறந்து வைத்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிறைக்கைதிகளும் தொற்றால் பாதிக்கப்படுவது உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக, சென்னையில் உள்ள புழல் சிறையில் கொரோனா வார்டு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அங்கு  புதிதாக  அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், புழல் சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 114 கைதிகளில் 99 பேர் குணமடைந்துள்ளனர் என்று  கூறினார்.

முன்னதாக சென்னையில் முதல்வர் மருத்துவ சேவை கழகத்திற்கான நல் ஆளுமை விருதை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வழங்கி கவுரவித்தது  குறிப்பிடத்தக்கது