தமிழகத்தை புரட்டியெடுக்கும் கொரோனா.. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 3949 பேர் பாதிப்பு

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து உள்ளது. நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையிலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக  இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் சென்னையில் இன்று மேலும் 2167 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து,  சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  55,969 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால்  62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை  1,141 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.323% ஆக உள்ளது.

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில்  மலேசியாவில் இருந்து வந்த 4 பேருக்கும், பக்ரைனில் இருந்து வந்த 3 பேர். கர்நாடகாவில் இருந்து வந்த 29 பேர், தெலங்கானாவில் இருந்து வந்த 15 பேர், மகாராஷ்டிராவில் இருந்த வந்த 17 பேர், சத்திஸ்கரில் இருந்து வந்த 15 பேர்.

இதுவரை 53,124 ( 61.61% ) ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 33,079 பேர் (38.36%) பாதிக்கப்பட்டுள்ளனர். திருநங்கைகள் 21 பேர் (0.024%) பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 37,331 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகம் முழுவதும் 30,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.