சென்னையில் குறைந்து வரும் கொரோனா.. இன்று 1,203 பேர் மட்டுமே பாதிப்பு…

சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று மட்டும் 65 பேர் உயிரிழந்தனர். 15 பேர் தனியார் மருத்துவமனையிலும், 46 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 4,545 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 71,116 ஆக அதிகரித்துள்ளதுஎனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று  1,203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மொத்த  பாதிப்பு எண்ணிக்கை 71,220 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,423 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,76,497 ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,285 பேர் ஆண்கள், 1,542 பேர் பெண்கள்.

தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு சார்பில்  மொத்தம் 95 பரிசோதனை மையங்கள்  உள்ளன.

கார்ட்டூன் கேலரி