கொல்கத்தா: மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியம் & டெல்லி பிரதேசங்களிலிருந்து கொரோனா பரவல், வடகிழக்கு மாநிலங்களை நோக்கி நகர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகிழக்கின் 8 மாநிலங்களில், தினசரி அதிகரிப்பு, தினசரி பாசிடிவ் முடிவு போன்றவை குறித்த புள்ளி விபரங்கள், இந்த நிலையை தெரிவிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த 1 வார காலத்தில், அப்பிராந்தியத்தில் நிலைமை மோசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகலாந்து மாநிலத்தை எடுத்துக்கொண்டால், மே மாதம் 25ம் தேதிதான் முதல் தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையில், பாசிடிவ் விகிதமானது, தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் இதுவரை 22 லட்சம் கோவிட்-19 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், அஸ்ஸாம், சிக்கிம், திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் பாசிடிவ் எண்ணிக்கை 68660.

இவற்றில், குணமானவர்கள் எண்ணிக்கை 48075 மற்றும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 195.