விழுப்புரத்தில் தீவிரமடையும் கொரோனா… இன்று மேலும் 10 பேர் பாதிப்பு…

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தல் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.  இன்று மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், நேற்று  ஒரே நாளில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,276 பேர் பாதிக்கப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி  18 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  478 ஆக உயர்ந்திருந்தது. 371 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 101 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 6 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று  மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 488ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.