புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பரவவல் அதிகரித்து வரும் நிலையில்,   மோடி தலைமையிலான அரசு, கொரோனா பரவ பரவலை கட்டுப்படுத்தாமல் வேடிக்கும் பார்த்து கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துவிட்டதாககூறி, கொரோனா கட்டுபாட்டு விதிகள் தளர்த்தப்பட்டது. இதில், மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக தமிழகம் இருந்தது.
.

மேலும் அரசு நடவடிக்கைகளில் மூலம் குறைக்கப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதாவது, கடந்த வாரம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொங்கியுள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,29,28,574 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் 685 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,66,862 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 59,258 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 1,18,51,393 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, 9,10,319 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குணமடைந்தோர் விகிதம் 91.67% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.29% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 7.04% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 9,01,98,673 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 2ம் வாரத்தில் இருந்து இதுவரை கொரோனா பாதிப்பு விகிதம் 33% அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் இந்த வேளையில், பொதுமக்கள் அரசு உத்தரவுகளை மதிக்காமல், சமூக இடைவெளிய கடைபிடிக்காமல் செயல்படுவது மேலும் கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளது.

இந்நிலையில்,  மோடி தலைமையிலான அரசு, கொரோனா பரவ பரவலை கட்டுப்படுத்தாமல் வேடிக்கும் பார்த்து கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.