சென்னை:

மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில்மட்டும் 55 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சென்னையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த காவலர்களுக்கு காவல்துறை உத்தரவிட்டு உள்ளது.

இந்தியாவில் பல மாநிரங்களில் கொரோனா தீவிரமடைந்து உள்ளது. நாட்டிலேயே 5வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு நேற்று நிலவரப்படி,  1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் ஊரடங்கை மீறி ஊர் சுற்றி வருகின்றனர்.  அவர்களை கைது செய்து காவல்துறை வழக்கு பதிவு செய்தும், அபராதம் விதித்தும் வருகிறது. இருந்தாலும் ஊர் சுற்றுவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

பொதுமக்கள் தேவையின்றி, எந்தவித பாதுகாப்பு கவசமுமின்றி வெளியே சுற்றி வருவதால் தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது சட்டப்படி  கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் நேற்றுவரை ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும்,  ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,55,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,27,325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.46 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.