கொரோனா பரவல் தீவிரம்: தமிழகத்தில் மேலும் 3 மாதம் இலவச ரேசன் பொருட்கள்….

சென்னை:

மிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் முழு ஊரடங்கு  மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் வரை, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் , மற்றும் சர்க்கரையை இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மாநிலம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை  64,603 ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழப்பும் எண்ணிக்கை  833 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில்,  இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மேலும் ஊரடங்கை அமல்படுத்தினால், அவர்களின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகி விடும்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் வரை, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் , மற்றும் சர்க்கரையை இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான மத்தியஅரசிடம் இருந்து கூடுதலாக நிவாரணப் பொருட்கள் ஒதுக்கும்படி தமிழகஅரசு சார்பில் கோரப்பட்டு உள்ளது.