வாஷிங்டன்:

லக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் உலக வல்லரசான அமெரிக்காவையே நடுநடுங்க வைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றால்  884 பேர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல 6 மாதக் குழந்தை ஒன்றும் கொரோனாவால் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி மக்களிடையே அச்சுறுத்தை உருவாக்கி உள்ளது.

தனது ஆயுத பலத்தால் உலக நாடுகளை மிரட்டி வரும் அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி, அந்நாட்டு மக்களை மிரட்டி வருகிறது. அங்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,116ஆக அதிகரித்துள்ளது. கடந்த   24 மணி நேரத்தில் மட்டும்  884 பேர் மரணத்தை சந்தித்து உள்ளதாகவும், இதுவரை 2லட்சத்து,15ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், ‘ ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில்,, அங்குள்ள  கனக்டிகட் மாகாணத்தில் பிறந்து 6 வாரங்களே ஆன கைக்குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உடற்கூறாய்வு சோதனையில் அக்குழந்தைக்கு கொரோனோ தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.