சென்னை:

மிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில்,  ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசுக்கு 1520 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 457 பேர் குணமடைந்துள்ளனர். அதிகப்பட்சமாக சென்னையில் 223 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா ஊரங்கு காரணமாக, ஐடி நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி வலியுறுத்தி வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் 20ந்தேதிக்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில்,  ஐடி ஊழியர்கள் நலன் கருதி,  இன்னும் அடுத்த சில வாரங்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் பல ஐடி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்திலும் ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என்றும், அதற்கான அறிவுரைகளை ஐடி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.