மதுரை:

துரையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மேலும்,  2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதனால் நேற்று ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் 96 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.

தொற்று அதிகரிப்பு காரணமாக நள்ளிரவு முதல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக 500 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது என மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு  சிறப்பு அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.