கொரோனா கொடுமைகள்

கொரோனா கொடுமைகள்

கொரோனா பரவுதல் குறித்த நெட்டிசன் சாய் ராமன் அவர்களின் முகநூல் பதிவு

சீனாவில் வுகான் நகர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செப்டம்பர் மாதத்தில் இருந்தே கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்து விட்டது. பலரும் நிமோனியா காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் காரணம் என்ன என்று தெரிந்தும் சீனா அதை அப்போது வெளிப்படுத்தவில்லை. அக்டோபர் நவம்பர் மாதங்களில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி விட்டது. எனினும் டிசம்பர் மாதத்தில் கோவிட்19 தாக்கம் மேலும் தீவிரமாகியது.

அதன் பிறகு 31 டிசம்பர் அன்று முதன் முதலாக கோவிட்19 பற்றிய செய்தி உலக நாடுகள் மத்தியில் பரவியது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சீனா சென்று திரும்பிய போதே நாம் உஷார் ஆகியிருக்க வேண்டும். அதன் பிறகு சீன அதிபர் ஜிங் பிங் இந்தியாவிற்கு வந்த போது ரெட் அலெர்ட் ஆக்கியிருக்க வேண்டும் அப்போதும் சீனாவை எல்லா நாடுகளும் நம்பின. ஜிங் பிங் மகாபலிபுரத்தில் பிரதமர் மோடியோடு பேசியதைப் பார்த்த உலக நாடுகள் சீனாவைச் சந்தேகப்படுவதைத் தவிர்க்கக் காரணமாயிருந்தது. இது உலக நாடுகள் இந்தியா மீது வைத்திருந்த நம்பிக்கை. சீனா தனது கோரமுகத்தை இந்தியாவின் அழகிய முகத்தை வைத்து மறைத்து உலகை ஏமாற்றியது. இதுவே வேர்ல்டு வைட் இண்டெலிஜென்ஸ் பெயிலர் ஆக முக்கிய காரணமாகி விட்டது.

இருந்தாலும் கொரோனா கொடூரத்தைச் சீனாவால் நீண்ட காலம் மறைக்க முடியவில்லை. யூகான் நகர் பயங்கரத்தை ஒரு புண்ணியவான் வெளியிட உலகமே பொறி தட்டிய மாதிரி விழித்துக்கொண்டது. இது நடப்பதற்குள் 2020 பிறந்து விட்டது. புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டத்தில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாஸ்போர்ட் விசாயின்றி பயணித்தது. ஏமாற்றியது சீனாவாக இருந்தாலும் ஏமாற்றப்பட்டது உலக பொருளாதாரத்தில் மேலோங்கி வளர்ந்த நாடுகளே. கொரோனா இதுவரை பாகிஸ்தான் தவிர வேறு எந்த பஞ்சப்பராரி நாடுகளுக்கும் பரவவில்லை.

கொரோனா கொடூரத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து தடுக்கும் முயற்சியில் எந்த நாடும் இறங்கவில்லை என்பது டோட்டல் இண்டெலிஜென்ஸ் பெயிலியரே. அன்று உலக நாடுகள் அனைத்தும் சீனாவை சோஷியல் எகனாமிக் அண்ட் பொலிடிகல் ஐசலேசன் செய்திருந்தால் இன்று நாம் அண்ணன் தம்பி அக்கா தங்கை சுற்றமும் நட்பும் நமக்குள்ளே சோஷியல் டிஸ்டன்ஸிங் செய்யாமல் காப்பாற்றப் பட்டிருப்போம்…

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

இதற்கு மேல் ஒரு சிறந்த அட்வைஸ் எச்சரிக்கை திருவள்ளுவர் தவிர யாரும் தரமுடியாது.

சரி ஜனவரி பிப்ரவரியில் சீனாவின் கோரமுகத்தைத் தெரிந்து கொண்டவுடன் போர்க்கால நடவடிக்கை எடுத்திருந்தால் மார்ச் மாதத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்ச்சுவரி செல்வதைத் தடுத்திருக்கலாம். உலக நாடுகள் பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டுவிடும் என அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் உடனடியாக செய்யாமல் போனதன் விலையை இப்போது ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டியும் சேர்த்து நம் தலையில் ஏற்றிக்கொண்டுள்ளோம்.

மத்திய அரசு இருபது நாட்களுக்கு முன்பே அனைத்து தனியார் செய்தி சேனல்களையும் மூடியிருக்க வேண்டும்.. தூர்தர்ஷன் மட்டுமே போதும்… ஆல் இந்தியா ரேடியோ மட்டும் போதும்… ஆனால் இதுவரை செய்யவில்லை. கொரோனா பரவுவதைக் காட்டிலும் அதிவிரைவாக பொய்ப்புரட்டு பீதி பரவிவிட்டது.

அனைத்து செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகள் அரசு கட்டுப்பாட்டில் இயங்கிட ஆணை பிறப்பித்திருக்க வேண்டும்.. இதுவரை செய்யவில்லை. இதன் பலனை விரைவில் அனுபவிப்போம்…

சோஷியல் மீடியா வலைத்தள நிறுவனங்களிடம் பேசி ஒருவர் நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஐந்து மாதங்களுக்கு மேல் போடக்கூடாது என்றும் ஷேர் ஆப்ஷனுக்கு தற்காலிக தடை விதிக்க சில மாதங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கச் செய்திருக்க வேண்டும். இதையும் இதுவரை செய்யவில்லை. நல்லவேளை அதனால்தான் இந்த நேக்கட் உண்மையை எழுதிப் பகிர்ந்து விட்டேன்..

சீன அதிபர் இந்தியா வந்து போனதிலிருந்து அதாவது 6 மாதத்திற்கு முன்பு வரையில் சீனா சென்று நாடு திரும்பியவர்களுக்கு அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் இந்தியாவிற்குள் நுழையத் தடை விதித்திருக்க வேண்டும். செய்யவில்லை

சீனாவிற்குச் சுற்றுலாப் பயணியாக, வியாபார ரீதியாக, படிப்புக்காகப் பயணம் செய்யத் தடை விதித்திருக்க வேண்டும். நாம் செய்யவில்லை.

மாறாக ஜிங் பிங் மாமல்லபுரம் வந்து போனவுடன் உலகமே இந்தியாவைக் கண்டு களிக்கச் சுற்றுலா வரும் என்ற வெற்று ஜம்பத்தில் காலத்தைக் கழித்தோம். இன்று பொதுக் கழிப்பறை போகமுடியாமல் அவதிப்படுகிறோம்.

சீனாவை நம்பியவன் நன்றாக இருந்ததாகச் சரித்திரம் இல்லை. சங்க இலக்கியங்களில் சீனாவுடன் நேரடி வாணிகம் செய்யாமல் எகிப்து கிரேக்கம் ரோமானிய பேரரசு வழியாக சில்க் ரூட் போட்டு வாணிகம் செய்த தமிழனின் அறிவு இன்று இந்தியனுக்கு இல்லாமல் போய்விட்டது..

நேரு பிரதமராக இருந்த போது சீனாவை நம்பி ஏமாந்து தன் உயிரையே விட்டார்… மோடியும் தற்போது சீனாவால் வஞ்சிக்கப்பட்டு விட்டார். இப்ப எங்கடா போனான் அந்த ஜிங் பிங்…

சீனாவைப் பற்றி உண்மை தெரிந்து கொள்ள ஒருமுறை ரத்தக்கண்ணீர் படத்தை மோடிக்குப் போட்டுக் காண்பித்திருந்தால் இப்போது இந்தியாவே ரத்தக்கண்ணீர் வடிக்க அவசியம் இல்லை. ஒரு நயவஞ்சக நாடு தனது கொடூர புத்தியால் உலக நாடுகளை பத்து ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளி விட்டதே…

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஜனவரி மாதத்தில் இருந்து தடை விதித்திருக்க வேண்டும் …. செய்யவில்லை. இதில் எத்தனை பூதம் உள்ளே வந்துள்ளதோ என்ற கவலை வந்து விட்டது.

இதெல்லாம் முன்கூட்டியே செய்யாமல் கோட்டை விட்டுவிட்டு இந்தியாவின் கேட்டைத் திறந்து கொரோனாவிற்கு சிவப்புக் கம்பளம் விரித்து விட்டுவிட்டனர். அதான் இவ்வளவு சிரமம்… சரி நடப்பதாவது நன்மை தரும் என்று நம்புவோம்.

மனிதன் கைவிட்டு விட்டால் என்ன

இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையுடன் வாழும் இந்திய மக்களை இறைவன் ஒருபோதும் கைவிட மாட்டான். இருப்பினும் மனிதனும் தெய்வமாகலாம் என்பது முற்றிலும் உண்மை என்று நம்மை நம்ப வைக்கும் விதமாக தன்னிடம் வந்தவர்களைக் காக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள் அவர்களுக்கு உதவிட இரவு பகலாக உழைத்திடும் அத்தனை பேருக்கும் என் கரம் சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறேன்.

எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்..

You may have missed