சென்னையை சூறையாடும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு….

--

சென்னை:

மிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 12 பேரை பலி வாங்கி உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சென்னையில் புதிதாக 559 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 65 சதவிகிதம் ஆகும்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில் மாநில அரசின் மெத்தனம் காரணமாக பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை  145 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி,  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும்,  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும்,  கீழ்பாக்கம் மருத்துவமனையில் 2 பேரும்,  மற்றும் ஐ.ஐ.டி. ஊழியர் ஒருவர் உள்பட மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.