மத்தியக் கிழக்கை வதைக்கத் துவங்கியுள்ள கொரோனா வைரஸ்!

துபாய்: சீனாவில் மையம் கொண்டு உலகெங்கிலும் உலாவரத் துவங்கியுள்ள கொரோனா வைரஸ் எனும் பயங்கரம், தற்போது மத்திய கிழக்கையும் ஆட்டிப்படைக்கத் துவங்கிவிட்டது.

மத்திய கிழக்கு நாடுகளில் அந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஈரான், ஐக்கிய அமீரகம் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த தற்போதைய விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி;

ஈரான் – பாதிப்பு 95, பலி 16
பஹ்ரைன் – பாதிப்பு 17
ஐக்கிய அரபு அமீரகம் – பாதிப்பு 13
குவைத் – பாதிப்பு 8
ஈராக் – பாதிப்பு 5
ஓமன் – பாதிப்பு 2
இஸ்ரேல் – பாதிப்பு 2
லெபனான் – பாதிப்பு 1
எகிப்து – பாதிப்பு 1
எகிப்து – பாதிப்பு 1

வரும் நாட்களில், இந்தப் பாதிப்பு மத்திய கிழக்கில் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த வைரஸ் ஐரோப்பியக் கண்டத்தை இப்போது ஆட்டிப் படைக்கத் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.