டோக்கியோ

கொரோனா பாதிப்பால் ஜப்பானில் அவசர நிலை பிரகடனப்படுத்த உள்ளதாகப் பிரதமர்  ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஜப்பான் நாட்டில் சுமார் 3900 பேருக்கும் அதிகமாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதுவரை 92 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ, மற்றும் ஒசாகா போன்ற பெரு நகரங்களில் அதிகம் பேர் பாதிக்கபட்டுள்ளன்ர்.

நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யுமாறு பல தரப்பினர் பிரதமர் ஷின்சோ அபே இடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அவர் அதையொட்டி ஆலோசனை நடத்தினார்.  ஆலோசனை முடிவில் டோக்கியோ உள்ளிட்ட 7 மாகாணங்களில்  அவசர நிலை பிரகடனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே செய்தியாளர்களிடம், “கொரோனா பாதிப்பால் டோக்கியோ, கனக் அவா, செயிட்டாமா, சீபா, ஒசாகா, ஹையோகோஃப்ட், மற்றும் ஓகா ஆகிய மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது.  இங்குள்ள மக்கள் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்னும் விவரங்கள் வெளியிடப்பட உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.