வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 73, 729 உயர்ந்து 19,97,666 ஆகி இதுவரை 1,26,597 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  73,729 பேர் அதிகரித்து மொத்தம்19,97,666 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6979 அதிகரித்து மொத்தம் 1,26,597 பேர் உயிர் இழந்துள்ளனர்.  4,78,503 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  51,502  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்றும் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  26,945 பேர் அதிகரித்து மொத்தம் 6,13,886 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2407 அதிகரித்து மொத்தம் 26,047 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 38,820  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 13,473 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  3641 பேர் அதிகரித்து மொத்தம் 1,74,060 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 499 அதிகரித்து மொத்தம் 218,255 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 67,504 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7371  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  2972 பேர் அதிகரித்து மொத்தம் 1,62,488 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 602 அதிகரித்து மொத்தம் 21,067 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 37,130 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 3188 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று 762 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 15,729 ஆகி உள்ளது.  இங்கு நேற்று 6524 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,43,303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1034 பேர் அதிகரித்து மொத்தம் 11,487 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 35 அதிகரித்து மொத்தம் 393  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1359  பேர் குணம் அடைந்துள்ளனர்.