வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 80,218 உயர்ந்து 17,79,099ஆகி இதுவரை 1,08,770 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  80,218 பேர் அதிகரித்து மொத்தம்17,79,099 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6083 அதிகரித்து மொத்தம் 1,08,770 பேர் உயிர் இழந்துள்ளனர்.  3,02,709 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  50,584  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்றும் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  30,003 பேர் அதிகரித்து மொத்தம் 5,32,879 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1830 அதிகரித்து மொத்தம் 20,577 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 30,463  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 11,471 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  4754 பேர் அதிகரித்து மொத்தம் 1,63,027 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 525 அதிகரித்து மொத்தம் 16,66 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 59,109 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7371  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  4694 பேர் அதிகரித்து மொத்தம் 1,52,271 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 619 அதிகரித்து மொத்தம் 19,468 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 32,534 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 3381 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று 635 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 13,892 ஆகி உள்ளது.  இங்கு நேற்று 4785 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,29,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  846 பேர் அதிகரித்து மொத்தம் 8446 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 39 அதிகரித்து மொத்தம் 288  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 969  பேர் குணம் அடைந்துள்ளனர்.