சென்னையில் இன்று (24ந்தேதி) கொரோனா நிலவரம்… மண்டலம் வாரியாக விவரம்…

--
சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையின் அனைத்துப் பகுதிகளும் கொரேனா வைரஸ் தொற்றால் சூழப்பட்டு உள்ளது.
தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகஅரசும்,  சென்னை மாநகராட்சியும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.
குறிப்பாக சென்னையில் இஸ்லாமியர்கள் ஷாகின்பாத் போராட்டம் நடத்திய ராயபுரம் பகுதியில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியா, ராயபுரம் பகுதி அடையாளம் காணப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று கொரோனா தாக்கம் எப்படி என்பது குறித்து, இன்று சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.