வேலூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்பட மாவட்டங்களில் கொரோனா நிலவரம்…

சென்னை:

மிழகத்தில் நேற்று (12/07/20202) ஒரே நாளில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,38,470 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றும் மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது.  இதுவரை, மொத்தமாக 1,38,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 89,532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தற்போதைய நிலையில்,  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் மாவட்டம்:

வேலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 209 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,981 ஆக உயர்ந்துள்ளது.  ஏற்கனவே 2,772 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில்  இதுவரை 1,038 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை  45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 45 கடைகளும் மூடப்பட்டுள்ளது. மாற்று ஊழியர்களை நியமித்து நாளை முதல் ரேஷன் கடைகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம்:

மதுரையில் புதிதாக மேலும் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கபட்டோர் மொத்த எண்ணிக்கை  6,307-ஆக உயர்ந்துள்ளது.

தேனி  மாவட்டம்:

தேன மாவட்டத்தில் ஏற்கனவே 1,729 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 134 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,863 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 608 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம்

நெல்லை மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  நேற்று று மாலை நிலவரப்படி,  1,758 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 836 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 911 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும்   53 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,811-ஆக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,526 ஆக உயர்ந்துள்ளது.