அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘கொரோனா சந்தேக’ வார்டு! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் ‘கொரோனா சந்தேக’ வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரி வித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5,24,420 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல பலி எண்ணிக்கையும்   8618 ஆக அதிகரித்து உள்ளது.    இதுவரை 4,70,192 பேர் குணம் அடைந்துள்ள நிலையில்,   46,610 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நாள்தோறும் 12,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு  மருத்துவமனைகளிலும் கொரோனா சந்தேக வார்டு (COVID Suspect ward) பிரிவு தொடங்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துஉள்ளார்.
பரிசோதனைக்கு முன்பே  கொரோனா அறிகுறி இருந்தால், அவர்கள்  கொரோனா சந்தேக வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு  சிகிச்சை அளிக்கப்படுவார்கள் என்றும்,  கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்து அறிகுறிகள் இருந்தாலும்,  அவர்கள் இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.