டெல்லி:
கொரோனா தொற்றில் நாட்டிலேயே 3வது இடத்தில் உள்ள தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,400 ஆக குறைத்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில்இருக்கும் நிலையில், 2வது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது. 3 வது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.
அங்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனையை அம்மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அரசு அனுமதி அளித்துள்ள தனியார் ஆய்வங்களில் இதுவரை ரூ.4500 பரிசோதனைக் கட்டணம் வசூலித்து வந்த நிலையில் ரூ.2400 ஆக டெல்லி மாநில அரசு நிர்ணயம் செய்து அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் தொற்று தீவிரமடைந்து வந்தநிலையில், என்.ஏ.பி.எல், அங்கீகாரம் உள்ள அனைத்து மருத்துவ சோதனைக் கூடங்களிலும் கோவிட்-19 சோதனை நடத்த இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அனுமதியளித்திருந்தது.
இந்த நிலையில் கெஜ்ரிவால் அரசு பரிசோதனை கட்டணத்தை பாதியாக குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.