டெல்லி: இந்தியாவில் இதுவரை 4.55 கோடி பேருக்கு கொரோனா சோதனை  செய்யப்பட்டு இருப்ப தாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 38,53,406 ஆகவும் உயிரிழப்பு 67,376 ஆகவும் உள்ளது. அதே வேளையில் கொரோனா பரிசோதனைகளின் அளவு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 4.55 கோடியை கடந்ததுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
இந்தியில் இதுவரை நடத்தப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4,55,09,380 ஆக உயர்ந்து உள்ளது.  நேற்று ஒரே நாளில் 10,12,367 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 11,72,179-க்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், 75,829 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 49,64,141 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. தொற்று சோதனை செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
அதிக அளவிலான சோதனை நடத்தப்பட்டு, தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுவ தால், உயிரிழப்பு வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.