ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா  சான்று அவசியம்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

சென்னை:

ரோடு மாவட்டத்திற்குள் நுழைய விரும்புபவர்களுக்கு கொரோனா  மருத்துவ பரிசோதனை சான்று அவசியம் என்று  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 85 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 206 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்,  ஈரோடு மாவட்டத்திற்குள் நுழையும் வெளி மாவட்டத்தினரால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து, மாவட்டத்திற்குள் நுழைபவர்கள்,  கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று அவசியம் கொண்டு வரவேண்டும் இல்லையேல் அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று   ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி