சென்னை: கேரளா எல்லையில் கொரோனா பரிசோதனை எடுத்த 15  நிமிடத்திற்குள் முடிவு கிடைப்பது போல தமிழக எல்லையில் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

தமிழக கேரளா எல்லைப்பகுதியில் கேரளாவிற்குள் நுழைய அம்மாநில அரசு எல்லையில் கொரோனா பரிசோதனை முகாம் அமைத்துள்ளது. மாநிலத்தற்குள் வருவோரை கொரோனா பரிசோதனை செய்து, அடுத்த 15 நிமிட காலத்திற்குள் (Positive, Negative) அதிகாரிகள் முடிவினை சொல்லி விடுகிறார்கள்.

ஆனால், தமிழக எல்லைக்கு வருவோரை தமிழக அரசின் சுகாதாரத் துறையினர் அவர்களது உடலின் வெப்பநிலை அளவினை (temperature) பரிசோதனை மட்டுமே செய்து அனுப்புகின்றனர். மாறாக, கேரள அரசை போல  தமிழக எல்லையில் தமிழகம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எல்லையில் முகாம் அமைத்து பரிசோதனை செய்து 10 நிமிடத்திற்குள்  கால தாமதம் இன்றி முடிவினை சொல்லும் வகையில் பரிசோதனை முகாமினை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் நோயாளிகள் என்று கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் யோசனை தெரிவித்துள்ளனர்.