புதுச்சேரி மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு இன்று கொரோனா சோதனை…

புதுச்சேரி:
புதுச்சேரியில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரோன பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியிலும், தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுஉள்ளன.
இந்த ஊரடங்கு காரணமாக,  கூலித்தொழிலாளர்கள், கட்டித்தொழிலாளர்கள்,  அமைப்புசாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவி செய்து வருகின்றன.
புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில், மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவருக்கும் இன்று கொரோனா சோதனை நடத்தப்படுகிறது.
இந்த தகவலை மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.