அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் : கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்

னைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் என அந்நாட்டுத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.  இதுவரை 12.27 கோடி பேர் பாதிக்கப்பட்டு 73.16 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இது குறித்து அதிகம் கவனம் கொள்ளாமல் இருந்ததால் முந்தைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தோற்கடிக்கப்பட்டு ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த ஜோ பைடன் குழு ஒன்றை அமைத்துள்ளார்.  கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இணைந்து பைடன் ஹாரிஸ் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து அமெரிக்கருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும் எனக் கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.  அவரது இந்த அறிவிப்புக்கு  அமெரிக்க மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.