டெல்லி:
ந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை (29ந்தேதி முடிய)  1 கோடியே 81லட்சத்து 90 ஆயிரத்தது 382 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தகவல் வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 15, 83,792 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 52,123 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,46,642 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளத.
ஜூலை 29 வரை,  நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் 1,81,90,382க்கும் அதிகமான கொரோனா தொற்று சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,  இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி 15 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதுவரை 34,968 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.