சரியான திசையில் செல்லாத கொரோனா பரிசோதனை நடைமுறை!

புதுடெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் வெளியிட்ட முதல் தரவு பகுப்பாய்வில், இந்தியாவின் கொரோனா பரிசோதனை செயல்பாடு சரியான திசையில் செல்லவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த தரவின் மூலம், மோடி அரசிற்கு தெரிய வேண்டியது இன்னும் அதிகம் என்பது புலப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மொத்தம்10 லட்சத்திற்கு மேலாக பரிசோதனை செய்யப்பட்டு, அவற்றில் 40,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட தரவை வெளியிட்டது ஐசிஎம்ஆர்.

இந்த தரவின் மூலமாக, கொரோனா வைரஸ் பாதித்த நபர்களை அடையாளம் காணுதல் மற்றும் பரிசோதனை செய்வதில், முக்கியமான 5 பாடங்கள் கிடைத்துள்ளன.

* தொடர்பு தடத்தைப் புதுப்பித்தல்

* பின்தங்கிய மாநிலங்களை முன்னுக்கு கொண்டுவருதல்

* ஆபத்தைத் தணிக்க குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுதல்

* ஒதுக்கப்பட்ட குழுக்களை மேலும் பரிசோதனை செய்தல்

* நோய் அறிகுறியற்றவர்களை அதிகளவு ரேண்டம பரிசோதனை செய்தல்

ஆகியவைதான் அந்த 5 அம்சங்கள்.