டில்லி

டுத்து வரும் 6 நாட்களில்  டில்லியில் கொரோனா  பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.

டில்லியில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.  அகில இந்திய அளவில் டில்லி மூன்றாம் இடத்தில் உள்ளது.  டில்லியில் கிட்டத்டட்ட 39 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு ஏற்படு அதில் 1200க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை கிட்டத்தட்ட 15000 பேர் மட்டுமே குணம் அடைந்துள்ளனர்.  டில்லியில்  கொரோனா தடுப்பு குறித்து இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா ஒரு கூட்டத்தை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் அவருடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுநர் அனில் பைசால், எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர், மாநில பேரிடர் மீட்பு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.  அந்த கூட்டத்தில் நோய்ப் பாதிப்பு, கட்டுப்படுத்தல் குறித்து ஆலோசனை நடந்தது.

கூட்டம் முடிந்த பிறகு அமித்ஷா தனது டிவிட்டரில், “டில்லியில் அடுத்த 2 நாட்களில் கொரொனா பரிசோதனை 2 மடங்காக அதிகரிக்கப்படும்.  அடுத்த 6 நாட்களில் இது மூன்று மடஙகாக அதிகரிக்கப்பட உள்ளது.  டில்லியில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் குறைவாக உள்ளதால் மத்திய அரசு சார்பாகப் படுக்கை வசதிகள் கொண்ட 500 ரயில் பெட்டிகள் மூலம் மேலும் 8000 நோயாளிகளுக்குப் படுக்கை வசதிகள் அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.