கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 40 லட்சத்தை கடந்தது, உயிரிழப்பு 70ஆயிரத்தை நெருங்கியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு 40லட்சத்தை கடந்துள்ளது, கொரோனா பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில் 3வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளிவல், நோய் தொற்று கண்டறியப் பட்டுஉள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று காரணமாக புதிதாக 87,115பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரசால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையானது 40 லட்சத்து 20ஆயிரத்து 239 ஆக உயர்ந்ளதுள்ளது.

ஒரே நாளில் நோய் பாதித்த 1,066 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 696,35ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.74 ஆக குறைந்துள்ளது.

தற்போதைய நிலையில்,  நாடு முழுவதும் தொற்று பாதிப்பு காரணமாக 8 லட்சத்து 45,477 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து 69,625 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 31லட்சத்து 04ஆயிரத்து 512 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி 4 கோடியே 66 லட்சத்து 79,145 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

You may have missed