31ந்தேதி வரை தமிழகத்தில் நகைக்கடைகள் மூடல்…

சென்னை:

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி வரை  அனைத்து நகைக் கடைகளும் மூடப்படும் என நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்த்லால் சலானி அறிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 7பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனோ வைரஸ் தொற்றுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில்,  முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகளை மார்ச் 31-ம் தேதி வரை மூட முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக நகை வணிகர் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி குறிப்பிட்டுள்ளார்.

, நகைக்கடையில் ஒருவர் தொட்ட பின்னர் நகைகளை இன்னொருவர் தொட்டுக் கையாளுவதால் வைரஸ் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.