கொரோனா அச்சுறுத்தல்: சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி இளங்கலை  மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது…இதனால் பல மாநிலங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், கேரள மாநிலப்பகுதிகளைச் சேர்ந்த 5 மாவட்டங்களில் மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள  ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,  இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.